கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.............

 கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.............

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் முயற்சியால்,  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் இன்று (22) கையளிக்கப்பட்டது.

 நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று   கோட்டக்கல்விப் பணிப்பாளர் தில்லைநாயகம்  உட்பட பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments