காத்தான்குடி சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அலி சாஹீர் மௌலானா நிதியுதவி............
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான கொடுப்பனவு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவினால் வழங்கப்பட்டது
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுய தொழில் முயற்சியாளருக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக முப்பதாயிரம் ரூபா வீதம் ஐந்து பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment