பெரியகல்லாற்றில் ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு................

 பெரியகல்லாற்றில் ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு................

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பணிப்பில் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பினை குறைக்கும் நோக்கில் வெள்ள நீரினை வடிந்தோடச் செய்வதற்காக பெரிய கல்லாறு ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எந்திரி நா.நாகரெத்தினம் அவர்களின் வழிகாட்டலில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் பொதுமக்களின் மக்களிப்புடன் குறித்த ஆற்றுவாய் வெட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments