மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களுக்கான பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை..............

 மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களுக்கான பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை..............

ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி பிரிவின் கீழ் இயங்கும் செங்கலடி மற்றும் கரடியனாறு பயிற்சி நிலையங்களுக்கான பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் தலைமையில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரனின் பங்குபற்றுதலிலும் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் போது பங்கு பற்றிய பயிற்சியாளர்களுக்கான தகைமைகள் பரீட்சிக்கப்பட்டு ஆவணங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிலைய ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளம் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

Comments