கொக்கட்டிச்சோலையில் தன் பிறந்ததினத்தில் தந்தையை இழந்த மகள்....
மகளின் பிறந்தநாள் நிகழ்வுக்காக சாப்பாட்டு பொருட்களை வாங்கி வந்த தந்தை ஒருவர் அவசரமாக வீதியோரத்தில் சிறுநீர் கழித்த வேளை பாம்பு தீண்டியதன் காரணத்தால் மரணமடைந்துள்ளார். இச்சம்பவமானது கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிள்ளையார் கோயில் வீதி, பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தவராசா திலகராஸ் (39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தனது பிள்ளையின் பிறந்ததினத்திற்காக உணவுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொணடிருந்த போது வீதியின் அருகில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றபோது பாம்பு தீண்டியதில் மயக்கமுற்ற நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment