இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனை..............

 இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனை..............

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் (24) நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பாலன் பிறப்பினை குறிக்கும் வகையில் ஆயரினால் பாலகன் கொண்டுவரப்பட்டு அதனை தொழுவத்தில் வைத்து பாலன் பிறப்பு நினைவுகூரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாடுகள் ஆயரினால் முன்னெடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன் போது முதலில் கறோல் கீதம் இசைக்கப்பட்டு, கிறிஸ்மஸ் பண்டிகைக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் நாட்டிலிருந்து பஞ்சம் நீங்க வேண்டும், பகிர்ந்து வாழ்வதுடன், நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்கவும் பிரார்த்திக்கப்பட்டது.
புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார், அருட்சகோதரிகள், பொது நிலையினர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த அன்னையின் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Comments