கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கலை கலாசார பொங்கல் விழா.......
கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கலை கலாசார பொங்கல் விழாவில் இடம்பெறவுள்ள நடன நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்றது.
எதிர்வரும் தைப் பொங்கல் விழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கிழக்குமாகாண கல்வி திணைக்களம் மற்றும் கிழக்குமாகாண சுற்றுலா பணியகம் ஆகியன இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்ததுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமை மற்றும் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண மாபெரும் கலை கலாச்சார பொங்கல் விழாவில், 1500 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நடன துறை ஆசிரியர்களின் வழிநடத்தலில் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா துறை பணியகம் அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களின் நடன ஒத்திகை இன்று (27) இடம்பெற்றது .
திருகோணமலை இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ள கிழக்கு மாகாண கலை கலாசார மாபெரும் பொங்கல் விழாவில், பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment