மட்டக்களப்பு காணிக்கை அன்னை ஆலயத்தில் பாலன் குடில் திறந்து வைப்பு....
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு சகலரும் தங்கள் வீடுகள், ஆலயங்கள், பணி ஸ்தலங்களில் பாலன் கூடுகளை காட்சிப்படுத்தி வருவது மார்கழி முதல் வாரத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்
அந்த வகையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி, காணிக்கை அன்னை ஆலயத்திலும் பாலன் கூடு மக்கள் பார்வைக்காக (03) அன்று திறந்து வைக்கப்பட்டது.
தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலயத்தில் செயற்பட்டு வரும் கிறிஸ்தவ வாழ்வுச் சமூக அங்கத்தவர்களால் ஆலயத்தின் முன் பகுதியில் உருவாக்கப்பட்டு இன்றைய திருவருகைக்கால ஆரம்ப நிகழ்வில் ஒன்றாக செய்யப்பட்டுள்ளது.
ஆலய பங்குத்தந்தை மா.ஸ்டனிஸ்லாஸ் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் இது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment