கடமைக்கும் பொறுப்புக்கும் அப்பால் வாகரை பிரதேச செயலாளரின் உயரிய பணி.....
தனது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியை மேலோங்க செய்வதற்காக, கடமைக்கும், பொறுப்புக்கும் அப்பால் தம் மக்களில் அக்கறை கொண்ட வாகரை பிரதேச செயலாளர் எந்திரி G.அருணன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவிப்பிரதேச செயலாளர் G.பிரணவன் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் A.சுதர்சன் அவர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து வாகரைப்பிரதேசத்தின் நிலையான மாற்றம் கல்வியின் மூலமே என்பதனை உணர்ந்து வாகரை கோட்ட பாடசாலைகளின் மாணவர்கள் க.பொ.த.சாதாரணதரப் பெறுபேற்றில் கணிதப் பாடத்தில் விசேட சித்தியினைப்பெற வேண்டும் எனும் நோக்கோடு விடுமுறை நாட்களில் கணித பாடத்தினை நடாத்துவதற்ககான முதல் கட்ட செயற்பாடாக இன்று (09) வாகரை மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் இனிவரும் காலங்களில் மிகச்சிறப்பாக நடைவதற்கு சகலரும் ஒத்துழைப்பதன் மூலம் ஒரு பாரிய மாற்றத்தை எற்படுத்த முடியும்.
Comments
Post a Comment