மட்டக்களப்பில் இருந்து திருப்பி அனுப்பபட்ட சீனி......
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு இணையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க என, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கா நுகர்ச்சி கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் இருந்து கொண்டுவரப்பட்ட 20 தொன் சீனி பழுதடைந்துள்ளது.
பழுதடைந்த சீனியின் பெறுமதி 54 இலட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது. சீனி பழுதடைந்திருந்தமை அவதானிக்கப்பட்ட நிலையில் அவை உடனடியாக திருப்பியனுப்பபட்டதாகக் கூறும் மட்டக்களப்பு மாவட்ட இணையத்தின் பொது முகாமையாளர் டி.ரஜினிகாந்த், புதிய சீனி வந்தவுடன், அவை விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments
Post a Comment