காத்தான்குடியில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன............
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தினால், சுய தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் இன்று (31) வழங்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தினால் இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் மா அரைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், இடியப்பம் தயாரிக்கும் இயந்திரங்கள் என பல்வேறு சுய தொழிலுக்கான உபகரணங்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் பணிப்பாளர் சபை தலைவர், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முதற்கட்டமாக 32 பயனாளிகளுக்கு இதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment