மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு புதிய அரசாங்க அதிபரை சந்தித்தது...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அரசாங்க அதிபராக கடமையை பொறுப்பேற்ற ஜஸ்ரின் யுலேகா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பிற்குமான கலந்துரையாடல் நிகழ்வு (20) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டனர். அரசாங்க அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமைப்பின் தலைவர்,
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயற்பாடு தொடர்பான விளக்கத்தை முன்வைத்தார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய இயங்குநிலை தொடர்பாகவும் மக்களின் வாழ்வியல், பொருளாதார நிலை தொடர்பாகவும் அமைப்பின் தலைவரால் விளக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான கருத்துக்களும் மக்கள் தம் வாழ்வியலுக்காக எதிர்கொள்ளும் சவால்களும் முன்வைக்கப்பட்டு விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதன் பிற்பாடு கலந்துரையாடல் இனிதே நிறைவுபெற்றது.
Comments
Post a Comment