பரிகார பூசை என்ற போர்வையில்இ நகைளைச் சூறையாடிய பூசகர்கள்........

 பரிகார பூசை என்ற போர்வையில்இ நகைளைச் சூறையாடிய பூசகர்கள்........

அம்பாறை, கல்முனையில் வீடொன்றில் பரிகார பூசை நடத்த வருகை தந்த இருவர், சூட்சுமமான முறையில் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

பாண்டிருப்பு பகுதியில் உணவகம் நடாத்தி வருபவர்களை அணுகிய இருவர், பரிகாரபூசை தொடர்பில் கூறியுள்ளனர். பரிகாரபூசையில் நம்பிக்கைகொண்ட உணவக உரிமையாளரின் மனைவி, தமது வீட்டில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பரிகார பூசையின் ஓர் அங்கமாக, தங்க நகைகளைப் பெற்றுக்கொண்ட பூசகர்கள், அவற்றை மண் சட்டியொன்றில் இட்டு, மூன்று நாட்களின் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். 3 நாட்களின் பின்னர் மண்சட்டியைத் திறந்து பார்த்தபோது, தாம் வழங்கிய தங்க நகைகள், சட்டியில் இல்லாததைக் கண்ட தம்பதிகள் அதிர்ச்சியுற்றனர்.

பரிகார பூசை என்ற பெயரில், சூட்சுமாக தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த தம்பதியினர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். முறைப்பாட்டில், பரிகார பூசை நடாத்துவதாக தங்களை அணுகியவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments