மாங்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் காளிராஜ் இறையடி சேர்ந்தார்.......
மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாங்கேணி சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக கடமையாற்றிய இராமலிங்கம் காளிராஜ் (27) அன்று இறையடி சேர்ந்தார்.
பால்சேனையை பிறப்பிடமாக கொண்ட இவர் 05 பிள்ளைகளின் தந்தையாவார். 47 வயதான இவர், 2000ம் ஆண்டு பால்சேனை கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று, பின்னர் 2011ம் ஆண்டு சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்று இறுதி வரை மாங்கேணி சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக கடமையாற்றி வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment