தீப்பற்றிய வீடு புணரமைக்க சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி வைப்பு...........

 தீப்பற்றிய வீடு புணரமைக்க சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி வைப்பு...........

(எம்.எச்.எம்.அன்வர்) புதிய காத்தான்குடி இரண்டாம் குறுக்கு வீதியில் தீப்பற்றிய வீட்டினை புணரமைப்பு மேற்கொள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியிலிருந்து ரூ.100,000.00 வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், புதிய காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.இர்பான், 167c கிராம சேவகர் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நூர்தீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வழங்கப்பட்ட நிதியுதவியூடாக தீப்பற்றிய வீட்டின் பகுதியளவை பூர்த்தி செய்துகொள்ளவும் பிள்ளைகள் கற்பதற்கான கல்வி உபகரணங்களை iware நிறுவனம் மற்றும் நலன்விரும்பிகள் வழங்கியிருந்தனர்.
இவ்வீட்டு உரிமையாளரின் மகனால் அண்மையில் வீடு எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்நபர் தற்போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments