வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் வருடாந்த ஒளி விழா..............
வின்சென்ட் மகளிர் கல்லூரியின் அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் வருடாந்த ஒளி விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
இவ்விழாவுக்கு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வணக்கத்துக்குரிய ஷாம் சுவேந்திரன், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தர்ஷினி சுந்தரேசன் வணக்கத்துக்குரிய போதகர் ஜோச் ஜீவராஜ் மற்றும் பல பிரமுகர்கள் பிரசன்னமாக இருந்தனர்.
இவ்விழாவில் இயேசு பிரானின் பிறப்பை நினைவு கூறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன, மாணவிகளின் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன, நத்தார் கீதங்களும் பாடப்பட்டன நிகழ்ச்சியின் போது வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர மகளிர் பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோரும் பொது மக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டு நத்தார் விழாவை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment