மட்டக்களப்பு ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தில் கணித ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது....
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வகுப்பறைகளைக் கொண்ட, கணித ஆய்வு கூடம் இன்று (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலய அதிபர் என்.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற கட்டடத் திறப்பு விழாவில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தனின் பிரதிநிதியாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு அரசினால் இலவசமாக வழங்கப்படும் பாதனிகளுக்கான வவுச்சர் வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்திற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு ஐயங்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment