மகிழூர்முனையில் இளைஞர் பரிமாற்ற நிகழ்வில், கேகாலை சகோதர இன இளைஞர் யுவதிகளை ஊரே கூடி வரவேற்றது......

மகிழூர்முனையில் இளைஞர் பரிமாற்ற நிகழ்வில், கேகாலை சகோதர இன இளைஞர் யுவதிகளை ஊரே கூடி வரவேற்றது......

(கடோ கபு) இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வடகிழக்கு மற்றும் தெற்கு இளைஞர்களுடையே இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக கேகாலை மாவட்ட இளைஞர் கழகத்திற்கும் மட்டக்கப்பு மாவட்டத்தின் மகிழூர்முனை கிராம இளைஞர் கழகத்திற்கும் இடையிலான இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது .

அதன் முதல் கட்டமாக 25 பேரினை கொண்ட மகிழூர்முனை இளைஞர்கழக குழுவானது கேகாலை மாவட்டத்திற்கு சென்று அங்கு 5 நாட்கள் அவர்களது வீடுகளில் தங்கியிருந்து சகோதர இனத்தவரது வாழ்க்கை முறையுடன் இணைந்து வாழ்ந்து, அவர்களது வாழ்வியலை அறிந்து கொண்டதுடன் அவர்களது பண்பாட்டு கலாச்சார அம்சங்களையும் அறிந்து கொண்டு பல நிகழ்வுகளிலும் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பியிருந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக கேகாலையினை சேர்ந்த 25 இளைஞர் யுவதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று மட்டக்களப்பு மகிழூர்முனை கிராமத்திற்கு வருகை தந்திருந்ததுடன், தொடர்ந்து 5 நாட்கள் அவ் ஊரில் தங்கியிருந்து தமிழர் வாழ்வியலையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் ஊரில் நடைபெறும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளனர்.

மகிழூர்முனை கிராமத்திற்கு நல்லிணக்க அடிப்படையில் இளைஞர் பரிமாற்றதிட்டத்தினூடாக வருகை தந்த சகோதர சிங்கள இன இளைஞர் குழுவை மகிழூர்முனை இளைஞர்கள் என்பதை தாண்டி அந்த ஊரே கூடி வரவேற்று நின்ற நிகழ்வை என்னால் பார்க்கக்கூடியதாக இருந்தது இது அந்த ஊரின் ஒற்றுமையையும் வாசல் நாடி வருவோரை வா என்று வரவேற்று நிற்கும் தமிழர் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

இவ் வரவேற்பு நிகழ்வை சிறந்த ஒழுங்கமைப்புடன் தமிழர் பாரம்பரிய அம்சங்களுடன் திட்டமிட்டு மகிழூர்முனை இளைஞர்கழகம் செயற்படுத்தியிருந்தது அன்றிலிருந்து இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குநிலையிலுள்ள இளைஞர் கழகங்களில் ஒன்றாக மகிழூர்முனை இளைஞர்கழகமும் திகழ்ந்துகொண்டிருக்கின்றமை சிறப்பானதே. 





Comments