கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நடராஜா சிவலிங்கம் பதவியேற்பு........
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை தரம்-1 அதிகாரி நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் (18) திகதி கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நியமனத்தினை பெற்று தனது கடமையினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சேவையாற்றி வரும் வேளையில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறந்த நிருவாகியான பொறியியலாளர் சிவலிங்கம் ஏலவே கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளராகவும், கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளருமாக பணியாற்றியிருந்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி.ஜெ.ஜெ.முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment