மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், சாதனை மாணவர்கள் கௌரவிப்பு...........
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்றத்தின் அனுசரணையில், அமரர் சிவசக்தி சிவநேசன் ஆசிரியரின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் சரோஜினி மகேஸ்வரநாதன் மற்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2022 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிப் பெற்ற மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மயிலம்பாவெளி விக்னேஸ்வரா ஆலய பிரதம குரு சிவநேச விக்னேஸ்வர குருக்கள், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கே.துரைராஜா, அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment