உதை பந்தாட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி.......

 உதை பந்தாட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி.......

THE BALL BLASTER உதை பந்தாட்ட போட்டியில் அகில இலங்கை ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களை கல்குடா மக்கள் சார்பாக வரவேற்று வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு (12) ஓட்டமாவடி பிரதேசத்தில கல்குடா ஜக்கிய தேசி கட்சி அமைப்பாளர் கலாநிதி எம்.பி.முஸாமில் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு ஜக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் அபுபக்கர் விலால், சட்டத்தரணி ஹபிப் றிபான், வர்த்தக சங்கத் தலைவர் நியாஸ் ஹாஜியார் ஆகியோர்களுடன் பல்வேறு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வரவேற்றனர்.

 கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கி ஊர்வலமாக வந்த மாணவர்கள் ஓட்டமாவடி சுற்று வளைவு மையத்தில் வைத்து பட்டாசு கொழுத்தி மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு ஊர்வலமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரை அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டு கல்லூரி சமூகத்தினரால் வரவேற்ப்பளிக்கப்பட்டு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஏறாவூர் நோக்கி வாகன பேரணியாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நடைபெற்ற  சுற்றுப் போட்டியில் 20 அணிகள் பங்கு கொண்டது. இதன் இறுதி ஆட்டம்  கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இறுதி ஆட்டத்தில் கொழும்பு சாஹிறா கல்லூரியும், மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும் மோதிக் கொண்டன. இதன் போது அலிகார் தேசிய கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இந்த மாணவர்கள் கொழும்பில் இருந்து ஏறாவூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டனர்.


Comments