தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியில் வர்த்தகப் பிரிவுக்கான கட்டடம் திறந்து வைப்பு.........
மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட, வர்த்தகப் பிரிவுக்கான வகுப்பறைக் கட்டத்தை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்வுகள் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, பாதணிகளுக்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டன.
ஆன்மீக அதிதியாக அருட்தந்தை தேவதாசன் அடிகளார் கலந்துகொண்டார். ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி அதிகாரி டி.ராஜ்மோகன், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி பிரபாகரன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஜெகநாதன், தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெயராஜா மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment