டச்பார் இஞ்ஞாசியார் ஆலய ஒளிவிழா......

 டச்பார் இஞ்ஞாசியார் ஆலய ஒளிவிழா......

மட்டக்களப்பு  டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின்  2023ம் ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

விசேடமாக மறைக்கல்வி மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இவ் ஒளிவிழா ஆலய வளாகத்தில் அருட்தந்தை சோலமன்ராஜ் அடிகளார் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ள மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் இயேசு சபை துறவிகள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

இதன் போது மறைகல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விசேட கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

















Comments