அமிர்தகழி கருணை முன்பள்ளியின் வருடாந்த நிறைவு விழா.......
மட்டக்களப்பு அமிர்தகழி கருணை முன்பள்ளியின் வருடாந்த நிறைவு விழா அதிபர் பிரதீபா தர்சன் தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் உமாபதி விவேகானந்தன், முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான முத்துராஜா புவிராஜா, மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு பிள்ளைகள் ஆடல், பாடல்கள், பேச்சு, கவிதை போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இதே வேளை ஆசிரியர், பெற்றோர்களது ஆடல், பாடல் நிகழ்வுகளும் அரங்கேறின.
நிறைவில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் கேடயங்கள் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment