மண்முனை வடக்கு பிரதேச கலைமன்றங்களின் கலைக்கதம்ப நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது..............
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலை மன்றங்களும் இணைந்து நடாத்திய, கலைஞர்களின் கலைக் கதம்பம் கலை கலாச்சார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
கலாசார நிகழ்வில் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஷ்வரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயரஞ்சனி, அகிலன் பவுண்டேஷனின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் லயன் மகேந்திரன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களான சீவரத்தினம் மற்றும் ரூபி வெலண்டினா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அகிலன் பவுண்டேசன் மற்றும் சுவிஸ் உதயம் ஆகிய அமைப்புகளின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ், இஸ்லாமிய மற்றும் பறங்கிய கலைஞர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேறின. கலந்து கொண்ட கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment