இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை சந்தித்த மட்டு இந்துக்கல்லூரி குழாம்......
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்காக இந்துக்கல்லூரியின் பாடசாலை அதிபர் திரு.பகீரதன் தலைமையிலான பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளும், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களை அவரது காரியாலத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், பாடசாலைக்கான தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கல்வி பின் தங்கிய நிலையில் காணப்படுவதாகவும், அதற்காக பல புதிய வேலைத்திட்டங்களை பழைய மாணவர் சங்கங்கள் மேற்கொண்டு வருவதாகவும், இதை சிறந்த அடைவு மட்டத்தை அடைவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற் கொள்ள இருப்பதாக பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அவர்கள், தன் முக்கிய நோக்கம் கல்வி வளரவேண்டும் என்பதாகும், எனவே இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தாம் மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள இந்துக்கல்லூரிக்கு இனி வரும் காலத்தில் செய்து தருவதாக உறுதியளித்தாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
Comments
Post a Comment