பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.............
மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், பல்வேறு சாதனைகளைப் படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை முதல்வர் ரி.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன், நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர் கே.செந்தூரன், சட்டத்தரணி ஆர்.றமணா, சட்டத்தரணி மு.கிருபாகரன் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள், சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திபெற்ற மாணவர்கள், தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment