இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்புச் சாலையில் கடமையாற்றும் சாரதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது......

 இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்புச் சாலையில் கடமையாற்றும் சாரதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது......

இலங்கைப் போக்குவரத்துச் சபையின், மட்டக்களப்பு பிரதான சாலையில் கடமையாற்றும் சாரதி மீது  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யக்கோரி, மட்டக்களப்புச் சாலைப் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(18) மாலை மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து அம்பிளாந்துறை நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி மீது கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து நடத்துனர் உட்பட நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதல் நடாத்தியதாகக் கூறப்படுகின்றது. படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றம் ஊடாக தண்டனைப்பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், (19) முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள நஸ்டத்தினை தாக்குதல் நடாத்தியவர்களிடமிருந்து அறவிடுமாறும் மட்டக்களப்பு சாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் கைது செய்யப்படாவிடின், நாளைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துச் சாலைகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு சாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு நகரிலிருந்து தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளும் குறுந்தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Comments