புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் ஒளி விழா நிகழ்வு.......
கிறிஸ்து பிறப்பை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் 2023 ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்றது.
இந்த
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை திருஇருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை
ஏ.தேவதாசன் மற்றும் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் தலைமை போதகர் கே.ஆர்.அருள்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன், இயேசுவின் இறையாட்சியை வெளிப்படுத்தும் கரோல் இன்னிசை கீதங்களும், நடனம், கதை, போன்ற கலை நிகழ்வுகளும் மாணவிகளால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment