கல்லடி வேலூர் ஸ்ரீசக்தி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.....
மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீசக்தி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா, வித்தியாலய அதிபர் எஸ்.பிரான்சிஸ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பரிசளிப்பு விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, பாடசாலை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன், வரவேற்பு நடனத்தை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு வெகுசிறப்பாக ஆரம்பமானது
பரிசளிப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பாடவிதான செயல்பாடுகள், பரீட்சைகள், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள், மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்
பரிசளிப்பு நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கல்லடி ராமகிருஷ்ண மிஷன் முகாமையாக சுவாமி நீல மாதவ மகராஜ் கலந்துகொண்டார். பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் உதவி கல்விப்பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், இலங்கை வங்கியின் கல்லடிக்கிளை முகாமையாளர் ஏ.எம்.பாரூக், நடன பாட ஆசிரியர் ஆலோசகர் சிவஞானஜோதிகுரு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment