வாழைச்சேனையில் மாணவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி...........
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கர்ப்பினித் தாய்மார்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் முகமாக மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரம், 'ஹனியல்' சிறுவர் அபிவிருத்தி விசேட இளையோர் திட்டத்தின் இவ் உதவிகளை வழங்கியது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் விசேட சித்தி பெற்று சாதணை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர், சமூக சேவைகளில் ஈடுபடுவோரும் கௌரவிக்கப்பட்டனர்.
போதகர் எல்.குணதுங்க, கிராம சேவகர்களான கா.ஜெகதீஸ்வரன், சி.வரதராஜன் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்
Comments
Post a Comment