காத்தான்குடி மக்கள் ஏதோ ஒரு தொழிலை செய்யும் ஆற்றல்: கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி....

காத்தான்குடி மக்கள் ஏதோ  ஒரு தொழிலை செய்யும் ஆற்றல்: கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி....

 காத்தான்குடி மக்கள் ஏதோ ஒரு தொழிலை செய்யும் ஆற்றல் படைத்தவர்களாக காணப்படுகின்றனர் என  காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன் தெரிவித்துள்ளார்.



பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி முன்னேற்ற வாராந்த கூட்டத்தின்போது மேற்கண்டவாறு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தொழில் முயற்சியில் ஈடுபடும் ஆற்றல் உள்ளவர்கள், வாழ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சும்மா வீட்டில் முடங்கி கிடக்காது தொழில் ஒன்றை செய்யும் மன நினலயில் இம்மக்கள் உள்ளார்கள்.
இவர்களுக்கு எம்மால் முடிந்த வழிகாட்டல்கள், ஆலோசனைகள் மற்றும் தேவையான பயிற்சிகள் வழங்குவதன் ஊடாக மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்துக்கொள்ளமுடியும், சுய தொழில் மேற்கொள்ளும் நபர்கள் அனேகமானோர் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றனர்.
குறிப்பாக வீட்டுக்கடை வைத்திருப்போர், கைத்தொழில் தெரிந்தவர்கள் மற்றும் அதில் சிறப்பான அனுபவமுள்ளவர்கள், தையல், இனிப்பு பண்டங்கள், நொறுக்குத்தீனிகள் செய்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
அதேபோல் வீட்டில் பயிர் செய்யக்கூடியவர்கள், கோழிவளர்ப்பு, பாய் பின்னல், நெசவு தொழில் செய்யக்கூடியவர்கள் இங்கு காணப்படுகின்றனர். இவர்களை மேலும் பலப்படுத்தி ஊக்குவிக்கவேண்டும் என தனதுரையில் தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments