கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இலக்கிய செல்நெறி ஆய்வரங்கம் நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இணைந்து கிழக்கு மாகாண இலக்கியப் படைப்பாளிகளுக்கான ஆய்வரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வானது கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆய்வரங்கத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி எனும் தலைப்பில் திறனாய்வு, கவிதைத்துறையின் செல்நெறி, நாவல்துறையின், மொழி பெயர்ப்புத்துறையின் செல்நெறி, சிறுகதைத்துறையின் செல்நெறி, பெண் எழுத்தாளர்களின் செல்நெறி மற்றும் இலக்கியத்தில் நவீன தொழில் நுட்பத்தின் செல்நெறி ஆகிய தலைப்புக்களின் கீழ் ஆய்வுகள் இடம்பெற்றன
வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வுப் பகிர்வின் நோக்கினை யப்பான் கச்சுயின் பல்கலைக்கழக ஓய்வுநிலை ஆய்வுப் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தினார்.
கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வியாளர்கள், கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதேச மாவட்ட மாகாண உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment