மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய பிரதி திட்டமிடல் பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வு.............

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய பிரதி திட்டமிடல் பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வு.............

மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டும் (30) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக 23 வருடம் கடைமையாற்றிய எஸ். அமிர்தலிங்கம் ஓய்வு பெற்று செல்கின்றார்.
1994 ஆண்டு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக தனது அரச சேவையில் இணைந்து கொண்டு, 2000 ஆண்டு முதல் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக மாவட்ட செயலகத்தில் சிறப்பான சேவையை மேற்கொண்டு வந்த நிலையில், 2005 ஆண்டு வீடமைப்பு திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளராகவும் கடமையாற்றியதுடன் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளிற்கு சென்று திட்டமிடல் செயல்முறை கற்கைகளை பூர்த்தி செய்துள்ளமை சிறப்பம்சமாகும்.
இன் முகத்துடன் அதிகாரிகளுடன் நற்பு பேணக்கூடிய பணிப்பாளருக்கு சேவை நலன் பாராட்டு உயர் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது. இதன் போது பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் சேவைக்காலத்தில் இடம் பெற்ற சுவாரசியமான நினைவுகளை மீட்டியிருந்தனர்.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஸிர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதிஸ்குமார், வி.நவநிதன் ரி.நிர்மலன், மாவட்ட செயலக நிர்வா உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் என பலர் கலந்து கொண்டனர்.

Comments