வாகரை மாங்கேணியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது......

வாகரை மாங்கேணியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது......

மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில், கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரியும் காயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புணாணையில் வசித்து வந்த 65 வயதுடைய எஸ்.டி.அனுர ஜெயலால் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபருடன் வருகை தந்தவர்கள் என நம்பப்படும், சிலர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Comments