மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா...........

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா...........

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் (15) திகதி இடம் பெற்றது.
அதிதிகளின் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட்தந்தையர்களான எம்.ஸ்டனிஸ்லாஸ் மற்றும் பி.அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் உலகின் சாந்தி சமாதானம் பிறக்க வேண்டும் என்பதற்காக அவதரித்த கிறிஸ்த்துவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக ஒளிவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன், சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும், சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் இதன் போது கலந்து கொண்டிருந்ததுடன், இதன் போது உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கற்றல் உபகரண தேவைப்பாடுள்ள பிள்ளைகள் சிலருக்கு இதன் புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













Comments