மட்டக்களப்பில் வீட்டுத்தோட்டம் முதல் பாடசாலை வரை செயல்திட்ட நடைமுறை......
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் "வீட்டுத்தோட்டம் முதல் பாடசாலை வரை" செயற்திட்ட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச் செயல்திட்டமானது பட்டிப்பளை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மேற்கு போன்ற பின்தங்கிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றது.
உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் கீழ் பாடசாலை மாணவர்களின் உடல் உள ஆரோத்தியத்தை மேம்படுத்துவதற்காக சமைத்த சத்துணவு வழங்கபட்டு வருகின்றது. இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
Comments
Post a Comment