சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் ஒளி விழா நிகழ்வுகள்...............
(டினேஸ்) சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களின் 2023ம் ஆண்டிற்குரிய வருடாந்த ஒளி விழா நிகழ்வானது (17) பங்குத்தந்தை ஜெயக்காந்தன் அடிகளாரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை நோட்டன் ஜோன்சன், அருட்சகோதரி டெல்சியா, வீரச்சோலை பாடசாலை அதிபர் சுதர்சன், பங்குச்சபை உறுப்பினர்கள், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், 2022, 2023 ஆண்டுகளில் புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவித்ததுடன், மறைக்கல்வி ஆசிரியர்களின் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, நிகழ்வின் இறுதியில் நத்தார் தாத்தா வருகை தந்து மகிழ்வித்ததுடன் சிறுவர்களும் இளைஞர்களும் நத்தார் தாத்தாவுடன் இணைந்து ஆடி மகிழ்வித்தார்.
Comments
Post a Comment