மட்டு இந்துக்கல்லூரி கல்விக்காக உதவும் பழைய மாணவர்கள்.......
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் கல்வி மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்துக்கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.பகீரதன் தலைமையில் இவ்வோலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2025ம் ஆண்டு க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தமிழ், கணிதம், விஞ்ஞானம் மற்றும் வரலாற்று பாடங்களில் சிறந்த பெறுபேற்றை பெறும் நோக்குடன் இம்மாணவர்களுக்கான காலாண்டுக்கான செயற்திறன் மாதிரி வினாத்தாள்கள் (18) ஆகிய இன்று கையளிக்கப்பட்டது.
இதன் போது முதல் காலண்டுக்கான செயற்திறன் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒரு வருடத்திற்கான இம்மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான முழு அனுசரனையையும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவியான மயூரா எழில்நாதன் வழங்கியுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் மு.சதீஸ்குமார், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment