மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிற்சைப்பிரிவு திறந்துவைப்பு..........
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கி வந்த ஆரம்ப மருத்துவ சிகிற்சைப்பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04) திகதி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தனின் பிரதிநிதியான இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, அதிதிகளினால் திட்டத்திற்கான விளம்பரப்படுத்தல் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு, நாடா வெட்டப்பட்டு ஆரம்ப மருத்துவ சிகிற்சைப்பிரிவிற்கான புதிய கட்டடம் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது அதிதிகள் உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து, அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் உயரதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் லட்சண்யா பிரசந்தன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment