பிரதேச இலக்கிய விழா..............

 பிரதேச இலக்கிய விழா..............

கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து (08) அன்று பிரதேச இலக்கிய விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 6 -18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டதுடன் பிரதேச இலக்கிய போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.முதலாம் இடத்தை பெற்ற அரங்க நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டது.

Comments