மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் மனிதநேயச் செயற்பாடு.............
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மரணதண்டனைக் கைதியொருவரின் வேண்டுகோளிற்கிணங்க அவரது மகளின் வாழ்வாதாரத்திற்கென புதிய தையல் இயந்திரம் ஒன்று (31)ம் திகதி மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதன் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா ஆகியோரின் தலைமையில் வழங்கப்பட்ட இத் தையல் இயந்திரத்திற்கான நிதி அங்கத்தவர்களின் பங்களிப்புடனும், அங்கத்தவர்களின் முயற்சியால் வெளி நிறுவனங்களின் அனுசரணையிலும் திரட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.
அடுத்த ஆண்டிற்கான சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவரை முன்மொழிவதற்காக இடம்பெற்ற விசேட கூட்டத்தில் வைத்து அங்கத்தவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் புதிய தலைவராக எபனேசர் தர்ஷன் அனைத்து அங்கத்தவர்களாலும் ஏகமனதாக முன்மொழியப்பட்டார்.
எதிர்வரும் 14.01.2024 அன்று இடம்பெறவுள்ள சங்கத்தின் பொதுக்கூட்டத்தின் பின்னர் புதிய தலைவர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினைப் பொறுப்பேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment