காத்தான்குடியில் தொற்றா நோய்கள் தொடர்பில் பரிசோதனை............

 காத்தான்குடியில் தொற்றா நோய்கள் தொடர்பில் பரிசோதனை............

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள் இன்று (05) இடம்பெற்றன.

இரத்தப் பரிசோதனை, நிறை என்பன பரிசோதனை செய்யப்பட்டதுடன் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகளும் இடம் பெற்றன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய ஸ்ரீதரின் ஆலோசனையில் இடம் பெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நசிர்தீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மீரா முகைதீன் ஆகியோர் பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனைகளை வழங்கியினர்.

Comments