மட்டக்களப்பில் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத் தெளிவூட்டும் செயலமர்வு...........
மட்டக்களப்பில் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத் தெளிவூட்டும் செயலமர்வு...........
இயற்கையைப் பாதுகாப்பதன் நிமித்தம் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத் தெளிவூட்டும் செயலமர்வும் நடைமுறைத் திட்டங்களும் மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இளையோர் அணியாகச் செயற்படும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள் செயல்பாட்டு செயலமர்வில் பங்கு பற்றினர்.
செயலமர்வின் நிறைவில் இயற்கையைப் பேணும் வகையில் 03 கிராமங்களில் உள்ள பொது இடங்களில் பயன்தரும் மரங்கள் செயற்பாட்டு இளைஞர் அணியினரால் நாட்டி வைக்கப்பட்டன.
சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர், வளவாளராக விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டப் பிரிவின் அதிகாரி ஆர்.பேரரங்கன் கலந்து கொண்டதுடன், சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் வி.அனுஷியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment