பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான செயலமர்வு.................
(எம்.எச்.எம்.அன்வர்) பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகமும் IWARE மகளிர் அமைப்பும் இணைந்து சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன் (12) காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பாடசாலை மாணவிகள் மற்றும் GBV Forum பங்குதாரர்களுக்கும் இரண்டு கட்டங்களாக செயலமர்வு காத்தான்குடி Beach Way Hotel இல் இடம்பெற்றது.
முதல் கட்டமாக மட்/அல் அமீன் வித்தியாலயம் மற்றும் மட்/பதுரியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10,11 ல் கல்வி கற்கும் 350 மாணவிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் சிராஜ் கலந்துகொண்டார்.
இரண்டாம் கட்ட அமர்வாக GBV Forum பங்குதாரர்களுக்கு இச்செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வின் வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் சிராஜ் மற்றும் உளநல வைத்திய அதிகாரி வைத்தியர் சௌந்தரராஜன் டான் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினர்.
இந் நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் MS.சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர், பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, சிறுவர் நன்நடத்தை திணைக்கள பொறுப்பதிகாரி, மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment