செங்கதிரோன் எழுதிய 'யாவும் கற்பனையல்ல' - சிறுகதைகள் நூல் மட்டக்களப்பில் வெளியீடு............

செங்கதிரோன் எழுதிய 'யாவும் கற்பனையல்ல' - சிறுகதைகள் நூல் மட்டக்களப்பில் வெளியீடு............

 செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகள் நூல்  சனிக்கிழமை (02) மட்டக்களப்பு பொதுநூலக பித்தன் ஷா அரங்கில் வெளியீடு செய்யப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா முன்னிலை வகிக்க, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அ.அ.நவரெத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் நிகழ்வுக்கு முன்னிலை வகித்த பேராசிரியர் மா.செல்வராஜா மங்கல விளக்கேற்ற, அதனைத் தொடர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி மகேந்திரன் டேசானி தமிழ்மொழி வாழ்த்து இசைத்தார்.

இங்கு வெளியீடு செய்யப்பட்ட 'யாவும் கற்பனையல்ல' சிறுகதை நூலின் முதல் பிரதியினை மெல்வேன் பாடுமீன் பழைய மாணவர் அமைப்புத் தலைவர் எந்திரி பரமானந்தன் தேவானந்தன் பெற்றுக் கொண்டார்.

இதன் போது அரங்கு அறிமுகம் மற்றும் வரவேற்புரையினை செங்கதிர் இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் அன்பழகன் குரூசும், வெளியீட்டு உரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினமும், திறன் நோக்கு - 1 இனை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர்  றூபி வலன்ரீனா பிரான்சிஸ்சும், திறன் நோக்கு - 2 இனை இரண்டாம் விசுவாமித்திரன் ஏ.பீர்முகம்மதுவும் நிகழ்த்தினர்.

இறுதியில் நன்றியுரை மற்றும் ஏற்புரையினை நூலாசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் ஆற்றினார்.





Comments