களுதாவளையில், விவசாயிகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு...........
விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, களுதாவளை கிராமத்தில் மரக்கறிப் பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (15) நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, வலயம் தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், பிரிவிற்குப் பொறுப்பான விவசாயப்போதனாசிரியர் பி.சிறிபவன் உட்பட விவசாயப் போதனாசிரியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது விவசாயத் திணைக்களத்தின் விவசாய வியாபார ஆலோசனைப் பிரிவின் ஹஃப் கிராமம் எனும் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் 50 வீத பங்களிப்புடனான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டன.
மரக்கறிப் பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பான தெளிவூட்டல்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ளூயசந குயஉநடிழழம வுறவைவநச Piவெநசநளவ றூயவளயுpp
Comments
Post a Comment