கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறுந்திரைப்பட பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது...............

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறுந்திரைப்பட பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது...............

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறுந்திரைப்பட இயக்குனர்கள், நடிகர்களுடனான அனுபவப் பகிர்வு பயிற்சி பட்டறை திருக்கோவில் காஞ்சிரங்குடா கால்நடை மருத்துவர்கள் பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர்கள், குறுந்திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த குறுந்திரைப்படங்களை தயாரிப்பது எப்படி? குறுந்திரைப்பட ஆர்வலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Comments