மட்டக்களப்பில் முதியோர் தின நிகழ்வு ..............

 மட்டக்களப்பில்  முதியோர் தின நிகழ்வு ..............

சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்போடு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்தன பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

முதியோர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டதோடு, பரிசில்களும் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுநரின் பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments