மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது........
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வெள்ள அனர்த்தம் காரணமாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மாவிலங்குதுறை மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையில், இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. கிராம சேவகர் தலைமையிலும், தீபாகரனின் ஒருங்கிணைப்பின் கீழும், பொருளாதார உத்தியோகத்தர், பொது அமைப்புக்கள் உதவியுடனும் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 32 குடும்பங்களுக்கு 3500ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment